சூர்யா42- "V" சென்டிமெண்டை கைவிட்டாரா சிறுத்தை சிவா?

#Cinema #TamilCinema #Movies #Tamilnews #Tamil #Tamil Nadu #Tamil People
Mani
3 years ago
சூர்யா42- "V" சென்டிமெண்டை கைவிட்டாரா சிறுத்தை சிவா?

இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது 42 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சூர்யா 42 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். திஷா பட்டானி கதாநாயகியாக நடிக்கிறார்.

பான் இந்தியா படமாக உருவாகி வரக்கூடிய இது 2டி மற்றும் 3டியில் வெளியாகிறது. ஃபேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தை 10 மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு. கோவா, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இந்த மாதம் 14-ம் தேதி படத்தின் டைட்டில் அறிவிப்பிற்கான சிறப்பு புரோமோ ஒன்றை படக்குழு வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிய வண்ணம் உள்ளது. சூர்யா 42 படத்தின் டைட்டில் மற்றும் டீசர் தயாராகிவிட்டதாகவும், அதனை அடுத்தடுத்து வெளியிடப்படும் என்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டிகளில் கூறி இருந்தார்.

தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துகு ‘வீர்’ அல்லது ‘அக்னீஸ்வரன்' என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 10 மொழிகளில் வெளியாவதால் எல்லா மொழிக்கும் பொருத்தமான தலைப்பாக இருக்க இந்த தலைப்பை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக வி சென்ட்டிமெண்டை கடைபிடிக்கும் இயக்குனர் சிவா இப்படத்திற்கு பெயரை மாற்றுவது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4